பெண்கள் விடுதியின் கழிவறைக்குள் நுழைந்த ராஜநாகம்… அலறி அடித்து ஓடிய பெண்கள்

484

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் மகளிர் விடுதி ஒன்று செயல்படுகிறது. அங்கு வேலை பார்க்கும் பெண்கள் தங்கியுள்ளனர்.

இன்று காலை ஒரு பெண் கழிவறைக்குப் போயுள்ளார். அப்போது டாய்லெட்டுக்கு அருகில் ஏதோ நெளிவது போல் இருந்தது. அது பாம்பு என்று தெரிந்ததும் அலறி அடித்து வெளியே ஒடி வந்த பெண். மற்ற பெண்களை அழைத்தார்.அவர்களும் பார்த்து அலரி அடித்து ஒடிவந்தனர். பின்னர் அந்த பெண்கள் ஒன்றாக சேர்ந்து திறமையாக அந்த கழிவறையின் கதைவை அடைத்து விட்டு பாம்பு பிடிப்பவர் ஒருவருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். பாம்பு பிடிப்பவர்கள் வந்து அந்த பாம்பை பிடித்து வெளியே கொண்டு வந்தனர்.இது அதிக விஷம் கொண்ட ராஜநாகம் பாம்பு. நல்ல வேளையாக இந்த பாம்பு யரையும் கடிக்கவில்லை, ஒருவேளை கடித்திருந்தால் உயிர் போயிருக்கும். பெண்கள் அனைவரும் சேர்ந்து அந்த கழிவறையின் கதவை முடியதால் பாம்பையை பிடிக்க முயன்றது. என்று பாம்பு பிடிப்பவர்கள் கூறுகின்றனர்.

இவ்வளவு பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் ராஜநக பாம்பு வந்தது எப்படி என்று கேள்வியை எழும்பியது. அது மரத்தின் கிளைகள் மூலம் வந்திருக்காலம் என சிலரால் கூறப்படுகிறது.