சட்ட ரீதியாக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் – ராஜபக்ச

513

சட்ட ரீதியாக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும், மாறாக அவையில் ஆயுதங்களை கொண்டு வந்ததே பிரச்சனைக்கு காரணம் என கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கூரிய ஆயுதத்தை கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

ஆனால் அவருக்கு எதிராக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் சட்ட ரீதியாக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்றும் ராஜபக்ச தெரிவித்தார்.

 

Advertisement