33 ரூபாய்க்காக 2 வருடம் காத்திருந்த எஞ்சினியர் – கடின முயற்சிக்கு கிடைத்த வெற்றி

764

ராஜஸ்தான் மாநிலத்தில் என்ஜினீயர் ஒருவர், 2 வருடங்களுக்கு முன்பு கேன்சல் செய்த ரெயில்வே டிக்கெட்டிற்கான ரூ.33 ரீபண்ட் பணத்தை திரும்ப பெற போராடி வந்தார். இந்த பணத்தை ரெயில்வே துறையிடம் இருந்து தற்போது திரும்ப பெற்றுள்ளார். 

ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா பகுதியைச் சேர்ந்த என்ஜினீயர் சுஜீத் சுவாமி(30). இவர் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி அமல் படுத்துவதற்கு முன்பாக, ஜுலை மாதம் 2ம் தேதி கோட்டாவில் இருந்து டெல்லி செல்ல ரெயில்வே டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். இந்த டிக்கெட்டை பின்னர் சொந்த வேலையின் காரணமாக கேன்சல் செய்துள்ளார்.

கேன்சல் செய்த பின்னர் ரீபண்ட் பணம் வருவதற்காக காத்திருந்தார். அவரது வங்கி கணக்கில் ரூ.2 ரீபன்ட்டாக ஏறியுள்ளது என குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சிக்கு உள்ளானார். இவர் ரூ.765க்கு டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். கேன்சல் செய்த பின்னர் ரூ.665 ரீபண்ட் பெற்றுள்ளார். ரூ.65 போக, மீதிப்பணம் ரூ.35 அவருக்கு திரும்ப வந்திருக்க வேண்டும்.

ஆனால், ரூ. 100 பிடிக்கப்பட்டுள்ளது. அந்த மீதிப்பணம் ரூ.35ல், ரூ.2 மட்டுமே வந்துள்ளது.

இதனையடுத்து ரெயில்வே துறை இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என கடந்த 2017ம் ஆண்டு தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் தகவல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார். இதற்கு ரெயில்வே துறை பதில் அளித்தது.

இதில், ‘ஜி எஸ் டி அமல் படுத்துவதற்கு முன்னதாக டிக்கெட் பதிவு செய்து, ஜிஎஸ்டிக்கு பின் கேன்சல் செய்துள்ளார்.

ஆரம்பத்தில் ரூ.100 தான் அனைவருக்கும் பிடிக்கப்பட்டது. அதன் பின்னரே இந்த முடிவில் மாற்றம் செய்யப்பட்டது. அதன் படி ரூ.35 சுஜீத்துக்கு வழங்கப்படும்’ என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2 வருட போராட்டத்துக்கு பின்னர் கடந்த மே1ம் தேதி அவரது வங்கி கணக்கில் ரூ.33 ஏறியுள்ளது.

இது குறித்து சுஜீத் கூறுகையில், ‘டிக்கெட் கேன்சல் செய்த பின்னர் ரீபண்டாக ரூ.2 பெற்ற நாள் முதல் நான் இது குறித்து விளக்கம் தெரிந்துகொள்ள தொடர்ந்து முயற்சி செய்தேன்.

எனது மனு 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி 2018 டிசம்பர் மாதம் வரை கிட்டதட்ட 10 முறைக்கும் மேலாக 8 துறைகளுக்கு மாறி மாறி சுற்றி வந்துள்ளது. இறுதியாக எனது பணத்தை திரும்ப பெற்றுக் கொண்டேன்’ என கூறினார். 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of