ராஜ்யசபா – போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் சதீஷ் | Satish Chandra Dubey

107

ராம்ஜெத் மலானி இவர் பீகார் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வானவர், இவர் கடந்த மாதம் காலமானார். இந்நிலையில், பீகாரில் காலியாக உள்ள ராஜ்யசபா இடத்துக்கு அக்டோபர் 16-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த இடத்திற்கு பாஜக சார்பில் சதீஷ் சந்துரு துபே போட்டியிடுகிறார்.

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் சதீஷ் சந்துரு துபே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரியிடம் இருந்து நேற்று அவர் பெற்றுக் கொண்டார்.

முன்பே, உத்தர பிரதேசம் மாநிலத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் சுதான்ஷு திரிவேதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of