“திமுக இல்ல அது குமுக!” அமைச்சரின் அதிரடி விளக்கம்! குமுக-னா என்ன தெரியுமா..?

896

திமுக-வின் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று கூறியிருந்த இவர், நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

இந்த பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசனையும் கடுமையாகி தாக்கி பேசியிருந்தார்.

இந்நிலையில் இவருக்கு திமுக-வில் இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “உதயநிதி ஸ்டாலினை விட பல நல்ல தலைவர்கள் திமுகவில் இருக்கிறார்கள்.

ஆனால் ஸ்டாலினின் மகன் என்ற தகுதி மட்டும் உள்ள உதயநிதிக்கு பதவி அளித்திருக்கிறார்கள். திமுக மடம் கிடையாது என கருணாநிதி கூறியிருந்தார். ஆனால் தற்போது பார்க்கும் போது திமுக மடாதிபதி மன்னராட்சி போலவே செயல்படுவது போல் தெரிகிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் என்பதற்கு பதிலாக குடும்ப முன்னேற்றக் கழகம் என வைத்துக் கொள்ளலாம். அது திமுக அல்ல, குமுக.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of