நேற்று ஒரு செய்தியாளர் சந்திப்பின் பொது பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நாவடக்கத்துடன் பேச வேண்டும், அவர் முதல்வரை பற்றி தவறாக பேசி வருகிறார் என்று தெரிவித்தார்.
நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டி கவுரவித்தது அ.தி.முக. அரசு தான். இந்த விவரங்களை அறியாமல் அவர் பேசிவருகிறார் என்று கூறினார். நடிகர்கள் ரஜினி, கமல் அவர்களது பணியை மட்டும் செய்ய வேண்டும் என்றும் நான் ரஜினி ரசிகன். அவர் படங்களை விருப்பி பார்ப்பேன் என்றும் குறிப்பிட்டார்.
ஆவின் பால் பாக்கெட்டுகளில் விரைவில் திருக்குறளுடன் திருவள்ளுவர் படம் அச்சிட நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வப்போது பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்படும் குறள்கள் மாற்றப்படும் என்றும் தெரிவித்தார்.