“பாஜக என்ன ஆகாத கட்சியா?” -ஆவேசமடைந்த ராஜேந்திர பாலாஜி..!

129

“பாஜக என்ன ஆகாத கட்சியா; அவர்கள் சொன்னா கேட்கக் கூடாதா?” என்றுதமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ரூ. 1. 05 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள போட்டித்தேர்வு பயிற்சி மையத்தை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆவின் பால் பாக்கெட்டுகளில் முதல்வரின் ஒப்புதலைப் பெற்று இன்னும் 15 நாட்களில் திருக்குறளை அச்சிட்டு விநியோகிக்க உள்ளோம். திருவள்ளுவரின் படத்தையும் இடம்பெறச் செய்வது குறித்தும் பரிசீலிக்கப்படும். குறிப்பிட்ட கால இடைவெளியில் திருக்குறளை மாற்றி அச்சிடுவோம்.

பாஜகவின் கோரிக்கையை ஏற்று செய்வதாக விமர்சனங்கள் வருவதாகச் சொல்கிறீர்கள். பாஜக என்ன ஆகாத கட்சியா? நல்ல விஷயங்களை அவர்கள் சொன்னால் கேட்கக்கூடாதா? பாஜக மத்தியில் ஆளும் கட்சி. அவர்கள் சொன்ன கருத்து நியாயமானது என்பதால் செயல்படுத்துகிறோம்” என்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of