திமுக-காரன் தப்பு செய்தால் வழுக்கி விழுந்து கை உடையும்..,! ராஜேந்திர பாலாஜி..,!

425

2019 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த தேர்தலில் புதுச்சேரி மற்றும் தமிழகம் உட்பட 40 தொகுதியில் 38-ல் திமுகவும், 1 தொகுதியில் அதிமுக-வும் வெற்றி பெற்றது.

வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாக கூறி தேர்தல் ஆணையம் தேர்தலை தள்ளி வைத்தது. இந்நிலையில் தற்போது வேலூர் தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக மற்றும் திமுக-வினர் கடுமையாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கே.வி.குப்பம் சட்டமன்ற பகுதி தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் ராஜேந்திர பாலஜி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில்,

“தி.மு.க-வினர் என்ன சொன்னாலும் இந்த அரசாங்கமும் நாட்டு மக்களும் கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதியா? சட்டம் தன் கடமையைச் செய்யும். அ.தி.மு.க-காரன் தப்புசெய்தாலும் வழுக்கி விழுந்து கை உடையும்.

தி.மு.க-காரன் தப்புசெய்தாலும் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை உடையும். எடப்பாடி ஆட்சியில் தப்பு செய்பவர்கள் யாரும் தப்ப முடியாது.”

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of