மோடியை “டாடி” ஆக்கிய அதிமுக அமைச்சர்!

238

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ-வில்லிபுத்தூரில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், ஜெயலலிதா என்னும் ஆளுமை இல்லாத நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தான் தங்களுக்கு ‘டாடி’ என்று தெரிவித்தார்.

மேலும், இந்தியாவை நல்ல முறையில் வழிநடத்தும் டாடியும் அவர் தான்.

மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சியும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியும் தொடர வேண்டும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.