ராஜீவ்காந்தி கொலை வழக்கு..! 7 பேரின் விடுதலை..! கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..?

705

1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி அன்று காங்கிரஸ் கட்சியின் அன்றைய தலைவர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் நிலையில், அவர்களை விடுதலை செய்ய பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். தங்களை விடுவிக்கக்கோரி, பேரறிவாளன் உட்பட 7 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து தமிழக ஆளுநர் முடிவு எடுக்கலாம் என்று தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து, தமிழக அமைச்சரவை கூட்டத்தில், அந்த 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து கவர்னர் ஆய்வு செய்து வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய மறுத்தவிட்டதாக கவர்னர் முடிவு எடுத்துள்ளதாகவும், இதனை எழுத்துப்பூர்வமாக இன்னும் தெரிவிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் தமிழ் ஆர்வலர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Advertisement