மோடி மீண்டும் பிரதமராக வருவாரா? கூலாக பதில் சொன்ன ரஜினி!

1122

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 95 தொகுதிகள் இடம்பெற்றிருந்தன.

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 69.55 சதவீத வாக்குப்பதிவும், 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் 71.62சதவீத வாக்குப்பதிவும் நடந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று நடிகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம் மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், மே 23 வரை பொறுத்திருங்கள் தெரிந்துவிடும் என கூலாக பதில் அளித்தார். மேலும் ரசிகர்களை ஏமாற்றாமல் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் எனவும் அவர் கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of