மகளின் திருமணத்தில் ரஜினியின் பேட்ட பராக் ஸ்டைல்…, இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ

693

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாவிற்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் நாளை (பிப்.11) திருமணம் நடைபெற இருக்கிறது.

இந்த திருமணத்தில் பங்கேற்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களையும், நெறுங்கிய உறவினர்களை மட்டுமே ரஜினிகாந்த் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.

Daughter

இந்த நிலையில், ரஜினிகாந்த் தனது மனைவி லதா மற்றும் உறவினர்களுடன், முத்து படத்தில் இடம்பெற்றிருந்த ‘ஒருவன், ஒருவன் முதலாளி’ பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகினர் மத்தியிலும் வைரலாக பரவி வருகின்றது.