திரையரங்கில் திருமணம் செய்து கொண்ட ரஜினி ரசிகர்கள்

728

ஒரு புறம் அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் படத்தை கொண்டாடி வருகின்றனர். இன்று வெளியான மற்றொரு படமான ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தையும் ரஜினி ரசிகர்கள் ஆராவராப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் சில இடங்களில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக திரையரங்குகளில் திருமணமும் செய்து வைத்து வருகின்றனர்.

சென்னை உட்லாண்ட்ஸ் திரையரங்கில் ரஜினியின் தீவிர ரசிகரான அன்பரசு என்பவர், தனது காதலி காமாட்சியை ரஜினி ரசிகர் மன்றம் உதவியுடன் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகு மண தம்பதிகளுக்கு சீர்வரிசை வழங்கியும் தியேட்டரின் வெளியில் உணவு வழங்கியும் அமர்க்களப்படுத்தியுள்ளனர். இதேபோன்று தஞ்சை சாந்தி திரையரங்கிலும் ஒரு தம்பதிக்கு திருமணம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of