69 பானைகளில் பொங்கல் வைத்து ரஜினி ரசிகர்கள் கொண்டாடினர்.

599

நாகர்கோவில், சக்கரவர்த்தி மாலில் இரண்டு தியேட்டர்கள் மற்றும் வசந்தம் பேலஸ் என 3 திரையரங்குகளில் ரஜினியின் ‘பேட்ட’ சினிமா திரையிடப்பட்டுள்ளது. வசந்தம் பேலஸ்ஸில் பேட்ட படத்தை காண ரசிகர்கள் அதிகாலை 5 மணிக்கே தியேட்டர் முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.

திரைப்படம் பார்ப்பதற்கு முன், முதல் காட்சிக்காக வந்திருந்த ரசிகர்கள் தியேட்டர் வாசலில் பொங்கலிட்டனர். படம் பார்க்க வந்த பெண்கள் 69 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினர். ரஜினியின் வயதைக் குறிப்பிடும் வகையில் 69 பானைகளில் பொங்கலிட்டதாக ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் தங்கம் தெரிவித்தார். மேலும் ரஜினி பட பேனர்களுக்கு பால் அபிஷேகம், கற்பூரம் காட்டியும் கொண்டாடினர். தொடர்ந்து அங்கு திருவிழா கோலமாக காட்சியளிக்கின்றது.