‘சூப்பர் ஸ்டாரின்’ பர்ஸ்ட் லுக் இன்று வெளியீடு

481

சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரல் சூதனை படைத்த பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த படக்குழு, தற்போது படப்பிடிப்புக்கு முழுமையாக தயாராகி விட்டது. ஏப்ரல் 10-ந் தேதி மும்பையில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா நடிக்கிறார். ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்கும் முருகதாசின் கத்தி படத்துக்கும் இசையமைத்த அனிருத், இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில், நாளை காலை 8.30 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருப்பதாக இப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of