ரஜினி-கமல் அரசியலில் இணைவதைவிட படத்தில் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும்..! – முத்தரசன்

418

அரசியலில் இணைவதைவிட படத்தில் ரஜினி – கமல் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உள்ளாட்சி மன்றத் தேர்தலை மறைமுகமாக நடத்தக்கூடாது வெளிப்படையாக நடத்த வேண்டும்.

தீபாவளி பண்டிகையின்போது டாஸ்மாக் விற்பனை குறித்து இலக்கு நிர்ணயித்த தமிழக அரசு உரம் கையிருப்பு குறித்து இலக்கு நிர்ணயிக்க தவறிவிட்டது. விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் அரசியலில் இணைவதை விட இருவரும் இணைந்து திரைப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும். பொதுத் துறைகளை மத்திய அரசு தனியார் மயமாக்குவது மிகவும் கண்டிக்கதக்கது. இந்த செயல் பொருளாதாரத்தை மிகவும் சீர்குலைத்து விடும்” என தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of