நடிகர் ரஜினிகாந்திற்கு சிறப்பு விருது: “ஐகான் ஆஃப் கோல்டன் ஜுபிலி” .. – அமிதாப் பச்சன் வழங்கினார்

175

நடிகர் ரஜினிகாந்திற்கு உலக திரைப்பட விழாவில் ”ஐகான் ஆஃப் கோல்டன் ஜுபிலி” என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.


50-வது உலக திரைப்படவிழா கோவாவில் உள்ள ஷியாமா பிரசாத் மைதானத்தில் இன்று தொடங்கியது. தொடர்ந்து 8 நாட்கள் நடைபெறும் இந்த விழா 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


இந்த நிலையில் ரஜினிகாந்திற்கு இன்று ஐகான் ஆஃப் கோல்டன் ஜுபிலி என்ற சிறப்பு விருதினை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சான் மற்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இணைந்து இந்த விருதினை வழங்கினர்.