”சோல்ஜர்ஸ் தயாராகுங்க…” – ரசிகர்களுக்கு ஆணையிட்ட சூப்பர் ஸ்டார்

575

சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராகுங்கள் என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி உத்தரவிட்டு உள்ளார்.

மேலும், மாவட்டந்தோறும் அரசியல் கட்டமைப்பு வேலைகளை முழுமையாக செய்து முடிக்கவும் தனது ரசிகர்களுக்கு ரஜினி அறிவுறுத்தி உள்ளார்.

தொடர்ந்து ஒரு வருடங்களுக்கு மேலாக ரஜினி மக்கள் மன்றம் உறுப்பினர்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி 90% வரை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும், உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்து இருந்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of