ஒரே ஒரு கல்வெட்டு..! ரஜினி பயத்தில் திமுக..! டிரெண்டாகும் ஹேஷ்டேக்..!

500

திமுக தலைவர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் அரசு பள்ளியை ரஜினி மக்கள் மன்றத்தின் வடசென்னை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியினர் சீரமைத்து கொடுத்துள்ளனர்.

கடந்த மாதம் 20-ந் தேதி சீரமைக்கப்பட்ட அரசு பள்ளி திறக்கப்பட்டது. இதற்கான கல்வெட்டு ஒன்றும் அப்போது திறந்து வைக்கப்பட்டது.

ஆனால் திடீரென ரஜினி மக்கள் மன்றத்தின் கல்வெட்டு அகற்றப்பட்டுள்ளது.

இந்த கல்வெட்டை திமுகவினர்தான் அகற்றியதாக ரஜினி ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், ட்விட்டரில் ரஜினி பயத்தில் திமுக என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டிங்காக்கி வருகின்றனர்.