ரஜினியை சந்தித்த விக்னேஷ் சிவன்! ரஜினியின் அதிரடி திட்டம்!

948

ரஜினி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். நேற்று முன்தினம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில், இயக்குநரும், நயனின் காதலருமான விக்னேஷ் சிவன் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படம் தொடர்பாக பல்வேறு யூகங்கள் இணையத்தில் உலா வருகின்றன. அதன்படி, சமீபகாலமாக இளம் இயக்குநர்களின் படங்களில் நடிக்க ரஜினி அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்தவரிசையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் புதிய படமொன்றில் நடிக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படம் தில்லு முல்லு போன்று முழுக்க முழுக்க நகைச்சுவை கதைகளத்தில் உருவாக இருப்பதாகத் தெரிகிறது. இதனால் தான் ரஜினி விக்னேஷ் சிவனை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of