“தலைவா கட்சி தொடங்கு..” ரசிகரின் கடைசி ஆசை..! ஆறுதல் கூறிய ரஜினி..!

563

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு, அரசியலில் ஈடுபட இருப்பதாக அறிவித்தார். ஆனால், இன்று வரை அதுதொடர்பான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தலைவா என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும், தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும், வீரநடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25 ஆயிரம் என்ற நிலை உருவாக்கி கொடு.

உன்னை அரியனையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம்” என்று கூறியிருந்தார்.

மேலும், இந்த பதிவில், நடிகர் ரஜினிகாந்தையும் அவர் டேக் செய்திருந்தார். இதற்கிடையே, அந்த ரசிகருக்கு ரஜினி ஆறுதல் செலுத்துவதைப்போன்ற ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் பேசிய அவர், “முரளி நான் ரஜினிகாந்த் பேசுறேன். உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா, தைரியமா இருங்க. நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். சீக்கிரம் குணமடஞ்சி நீங்க வீட்டுக்கு வந்துருவீங்க.

குணமடஞ்சு வந்த பிறகு, ப்ளீஸ் குடும்பத்தோடு வீட்டுக்கு வாங்க” என்று கூறியிருக்கிறார். இதுதொடர்பான ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.