பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு..! – ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்

427

நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து சர்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
ரஜினி மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்ய மனு அளிக்கப்பட்டுள்ளது.

துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்பொழுது அவர் பேசுகையில் பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

மேலும்,செருப்பு மாலை போடப்பட்டது என்று ரஜினி கூறினார்.இவ்வாறு ரஜினி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.ஒரு தரப்பினர் ரஜினியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் கோவை திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.இந்நிலையில் பெரியார் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசிய ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் தபசி குமரன் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் திருவல்லிக்கேணி D1 காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of