அரசியலில் என் வழி தனி வழி ரஜினிகாந்த் எச்சரிக்கை

766

ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்து அரசியலில் சாதிக்க முடியாது என்று விளக்கம் அளித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளிட்டுள்ள அறிக்கையில், மன்ற உறுப்பினர்களின் நியமனம் மாற்றம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்துமே தமது ஒப்புதலுடன்தான் அறிவிக்கப்படுகின்றன என கூறியுள்ளார். தான் அரசியலுக்கு வந்தால் அதை வைத்து பதவி, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பவர்களை அருகிலேயே சேர்க்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒரு புது அரசியலை அறிமுகப்படுத்தி அதன் மூலம் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன் என்றும், அப்படியில்லாமல் மற்றவர்களை போல் அரசியல் செய்வதற்கு தான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என வினவியுள்ளார்.

ஒருவரது எண்ணங்கள் சரியாக இருந்தால்தான் அவர்களது செயல்பாடுகளும் சரியாக இருக்கும் என்றும், எனவே, தவறான எண்ணம் உடையவர்களிடம் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் எனவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

குடும்பத்தை பராமரிக்காமல் யாரும் மன்ற பணிகளுக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தி உள்ள ரஜினிகாந்த், தான் மன்றத்திற்கு கொடுத்த வேலை, பணம் செலவழித்த செய்ய வேண்டிய வேலை இல்லை என குறிப்பிட்டுள்ளார். வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலில் சாதிக்க முடியாது என்றும் மக்களின் ஆதரவு இல்லாமல் நாம் அரசியலில் சாதிக்க முடியாது எனவும் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of