அரசியல் நோக்கம் இல்லாமல் கட்சி தலைவரைகளை சந்திக்கும் ரஜினி

165

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், பிரபல தொழிலதிபர் விசாகனுக்கும் வருகின்ற 11 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

இந்த திருமணத்திற்காக நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு திருமண பத்திரிகைகளை கொடுத்து வருகின்றார்.அந்த வகையில், சென்னை அண்ணாநகரில் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்தார்.

அப்போது இருவருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்து திருமணத்தில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்தார்.

அவர்களை தொடர்ந்து, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்று தனது மகளின் திருமணத்திற்கு வருகை தரவேண்டும் என அழைப்பு விடுத்தார்.