செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினி பேசிய 10 முக்கிய தகவல்கள்..!

598

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தனது அரசியல் வருகை குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அதில், முக்கியமான 10 விவரங்களை தற்போது பார்ப்போம்..

1. 2017 டிசம்பர் 31 அன்று சட்டமன்றத்தேர்தலுக்கு முன்னால் கட்சி ஆரம்பித்து மக்களை சந்தித்து போட்டியிடுவேன் என்று கூறினேன்.

2. ஆனால், அதை என்னால் செய்ய முடியவில்லை. எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

3. மக்களை சந்திக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், மருத்துவர்கள் கொரோனா தொற்றால் வெளியே செல்வது ஆபத்து என்றார்கள். தற்போது அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் கட்டாயம்.

4. அன்று சொன்னதுதான் இன்றும் சொல்கிறேன். கொடுத்த வாக்கில் தவறமாட்டேன்.

5. தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை. சந்தோஷம்தான்.

6. நான் ஏற்கெனவே உயிருக்கு போராடியபோது தமிழக மக்கள் செய்த பிரார்த்தனையால் உயிர் பிழைத்து வந்தேன்.

7. நான் வெற்றி பெற்றாலும் அது மக்களின் வெற்றி. நான் தோல்வி அடைந்தாலும் மக்களின் தோல்வி.

8. இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை. மாத்துவோம். எல்லாத்தையும் மாத்துவோம்.

9. தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றும் நாள் வந்துவிட்டது. ஆட்சி மாற்றம் நடக்கும்.

10. அரசியல் மாற்றம் நடக்கும். மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம்.

Advertisement