7 பேர் விவகாரம் : நான் முட்டாள் இல்லை – ரஜினிகாந்த்

681

7 பேர் விவகாரம் தனக்கு தெரியாதது போல் மாய தோற்றத்தை உருவாக்குவதாகவும், அவர்களை பற்றி தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை எனவும் நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் குறித்து கேள்வி கேள்விக்கு எந்த 7 பேர் என செய்தியாளர்களிடம் திருப்பி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பாக இன்று போயஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அப்போது, 7 பேர் விடுதலை விவகாரம் குறித்து தனக்க தெரியாது என்ற மாயையை உருவாக்குவாதாகவும், எனக்கு தெரியும் என்றால் தெரியும், தெரியாது என்றால் தெரியாது என கூறுவேன் என தெரிவித்தார்.

அதேநேரத்தில் 7 பேர் பற்றி தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை என்றார். நேற்று நிருபர்கள் கேட்ட கேள்வி தெளிவாக இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து என்றார்.

Advertisement