தமிழக மக்கள் அதிசயத்தையும், அற்புதத்தையும் நிகழ்த்துவார்கள் – நடிகர் ரஜினிகாந்த்

452

2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தையும், அற்புதத்தையும் நிகழ்த்துவார்கள் என, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கோவாவில் நடைபெற்ற 50வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்றபின் சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தான் வாங்கிய சிறப்பு விருதிற்கு தமிழக மக்கள் தான் காரணம், என கூறினார்.விருதை தமிழக மக்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார்.

2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தமிழக மக்கள் 100 சதவீதம அதிசயத்தையும், அற்புதத்தையும் நிகழ்த்துவார்கள் என கூறிய அவர், கமலுடனான கூட்டணி தொடர்பாக தேர்தல் நேரத்தில் தான் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

கமலுடன் இணைந்தால், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது அரசியல் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.