“மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது” – பெரியார் அவதூறு புகார் குறித்து ரஜினிகாந்த் பேட்டி

274

துக்ளக் விழாவில் பேசியதற்காக மன்னிப்பு கேட்கமுடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பத்திரிகையில் வெளியான செய்தியைத்தான் பேசினேன் என்றும் இது மறுக்க வேண்டிய சம்பவம் அல்ல, மறக்க வேண்டிய சம்பவம் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

சென்னையில் இன்று,செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971- இல், சேலத்தில் நடைபெற்ற ஊர்வலம்   குறித்து 2017 ஆம் ஆண்டு அவுட்லுக் பத்திரிகையில் வெளியான செய்தியைத்தான் பேசினேன் என்று கூறினார்.

ராமர் -சீதை படங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது குறித்து அந்த செய்தியில் இருந்ததைத்தான் பேசினேன் என்றும்  குறிப்பிட்டார். துக்ளக் விழாவில், கற்பனையாக எதையும் தாம் பேசவில்லை என்றும் விளக்கமளித்தார்.

அந்த செய்திக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும் ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்தார். அந்த சம்பவம் மறுக்கவேண்டிய சம்பவம் இல்லை மறக்கவேண்டிய சம்பவம் என்றும் ரஜினிகாந்த் விளக்களமளித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of