முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா வரும் 16ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இவ்விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா வரும் 16ம் தேதி (நாளை) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார். மேலும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிலை திறப்பு விழாவை தொடர்ந்து, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு ஏற்கனவே மக்கள் மீது மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வருகை தரும் நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் வரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of