அரசியலில் நான் போட்ட புள்ளி, விரைவில் சுனாமியாக மாறும் – ரஜினி

411

சென்னை எம்.ஆர்.சி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் தூக்கி எறியப்பட்டதால், அனுதாப அலையில் அவர் வெற்றி பெற்றதாகவும், ராஜிவ் காந்தி படுகொலையின் போது, திமுகவுக்கு எதிரான அலை வீசியதால், ஜெயலலிதா வெற்றி பெற்றதாகவும் குறிப்பிட்டார்.

அரசியலில் தான் வைத்த புள்ளி அலையாக மாறி, தற்போது சுழலாக உள்ளது என்றும், விரைவில் அது சுனாமியாக மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். தான் சொன்ன அரசியல் அற்புதம் நிச்சயம் நிகழும் என்றும் கூறினார்.

Advertisement