அதிரடியாக வெளியானது 2.0 படத்தின் டீசர்

726

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவன தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் 2.0. கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய 2.0 படத்திற்கான பணிகள், சுமார் ஒன்றரை ஆண்டுகள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்றன.

ஆனால் கிராபிக்ஸ் பணிகளில் தொய்வு ஏற்பட்டதால் இந்த ஆண்டு ஜனவரியில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் கிராபிக்ஸ் பணிகள் முடியாத காரணத்தினால் ஏப்ரலில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு தற்போது நவம்பர் 29ந் தேதி 2.0 வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் 2.0 படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

2.0 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். பிரபல இந்தி நடிகர் அக்சய் குமார் வில்லனாக நடித்துள்ளார். சுமார் 572 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள 2.0 இதுவரை வெளியான இந்திய படங்களிலேயே பெரிய பட்ஜெட் படம் என்று கூறப்படுகிறது.