பேட்ட படத்தின் செகண்ட் லுக் போஸ்டரில் அருவா மீசை கெட்டப்பில் ரஜினிகாந்த்

908

காலா படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் 2.0 மற்றும் பேட்ட ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2.0 படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்று, வரும் நவம்பர் 29-ந் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் ரஜினியின் 165-வது படமான பேட்ட படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லன் வேடத்தில் நடிக்கிறார். மேலும் சிம்ரன், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் உள்பட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

சமீபத்தில் பேட்ட படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று பேட்ட படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் ரஜினிகாந்த் இளமை தோற்றத்தில், அருவா மீசையுடன் இருக்கிறார்.

ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ள இந்த போஸ்டர், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இதனிடையே போஸ்டரில் ரஜினிகாந்தின் தோற்றம் தேவர்மகன், வீரம் போன்ற படங்களை எதிரொளிப்பதாகவும், ரஜினிகாந்தின் மீசை சிங்கம் சூர்யா போன்று உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.