இடைத்தேர்தலில் போட்டியில்லை! ரஜினிகாந்த்!!

128

வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.

அதிமுக மற்றும் திமுக ஆகிய முக்கிய கட்சிகள் அவர்களது, கூட்டணி கட்சிகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். கமல், சீமான் ஆகியோர் தனித்து போட்டியிடுவதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் நடிகர் ரஜினிகாந்த் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியில் அவர், 21 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியில்லை என்று தெரிவித்துள்ளார்.