நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது தான் ரஜினியின் கொள்கை!! – அமைச்சர் ஜெயக்குமார்

380

ரஜினிகாந்த் இன்று தனது மன்ற செயலாளர்களுடன் போயஸ் தோட்ட இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எங்களது இலக்கு சட்டசபை தேர்தல்தான். எனது ஆதரவு எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்

‘தனது நிலைப்பாட்டை அறிவித்த ரஜினிக்கு என்னுடைய வாழ்த்துகள்.ஒவ்வொருவருக்கும் ஒருவொரு கொள்கை இருக்கும். அதுபோல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது ரஜினியின் கொள்கை.’

இவ்வாறு அவர் கூறினார்.