பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்பது தமிழகத்தின் எண்ணம்

652

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்பது தமிழகத்தின் ஒட்டுமொத்த எண்ணம் என்றும், அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஏற்பார் என நம்புவதாகவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7 பேர் விடுதலையை காங்கிரஸ் எதிர்க்கும் நிலையில் திமுக என்ன செய்யப்போகிறது என கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், காங்கிரசுடன் திமுக கூட்டணி நீடிக்குமா என்றும் இதுகுறித்து ஸ்டாலின் பதில் கூற தயாரா எனவும் கேள்வி எழுப்பினார். பெட்ரோல், டீசல் விலையை ஏற்றிக்கொண்டே செல்வதே ஏற்க முடியாது என்றும், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு 50 சதவீதம் குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Advertisement