ராஜீவ்காந்தி கொலை வழக்கு! சிறையில் இருந்து வெளியே வரும் நளினி!

773

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை பெற்றனர். 27 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் அந்த 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்தது.

Rajiv Gandhi, Prime Minister ( Congress, Portrait )

இதையடுத்து நீதிமன்றம் அந்த 7 பேரை விடுவிக்கும் உரிமையை மாநில அரசிடம் ஒப்படைத்தது. இதுகுறித்து இன்றும் ஆளுநர் முடிவெடுக்காத நிலையில், ஏழு பேரில் ஒருவராகிய நளினி, அவரது மகளின் திருமண விஷயம் தொடர்பாக பரோல் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும், இந்த வழக்கில் நேரில் ஆஜராகி வாதிட எனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் கூறியிருந்தார். நளினியின் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் நளினி நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

இதையடுத்து நளினி நேரில் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணை நடைபெற்றது. இறுதியில் நளினிக்கு நீதிமன்றம் ஒரு மாதம் பரோல் அளித்து உத்தரவிட்டுள்ளது.