மிக மோசமான சரிவு.., புலம்பித் தள்ளிய மோடியின் பொருளாதார ஆலோசகர்..!

664

இந்தியாவின் பொருளாதார சரிவு நிமிடத்திற்கு நிமிடம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. சுதந்திர இந்தியாவில் தொடக்கத்தில் இருந்ததை போல மிக மோசமான பொருளாதார நிலைக்கு இந்தியா சென்றுவிடும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

பொருளாதார சரிவு குறித்து தற்போது மத்திய அரசின் முக்கிய அதிகாரிகளும், பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகரும் குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், நிதி ஆயோக் துணை தலைவர் ராஜிவ் குமார், கடந்த 70 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமான பொருளாதார சரிவை இந்தியா சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது கிடையாது என்றும், இந்த இக்கட்டான நிலையை கடக்க போதுமான நடவடிக்கையை எடுக்க தொடங்கி உள்ளோம் என்று ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of