ராஜீவ் கொலை வழக்கு : சிறையிலுள்ள நளினி புதிய மனு தாக்கல்

123

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ஆம் தேதி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர்11ஆம் தேதி ஆளுனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த பரிந்துரை மீது ஆளுனர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருந்ததாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது நளினி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார்.

அதில், தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய பின், அது குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் செயல்படாமல் இருப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்று தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மீறி ஆளுநர் செயல்படுவதாகவும் நளினி தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of