கன்னட நடிகர் கடத்தப்பட்ட வழக்கு : குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை

543

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த 2000ஆம் ஆண்டு, ஜூலை 30ஆம் தேதி, ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே, பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு கோபிசெட்டிபாளையம் 3வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

18 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் இன்று விடுதலை செய்ப்பட்டனர்.

சரியான முகாந்திரம் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.

குற்றம்சாட்டப்பட்ட14 பேரில் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கவுடா ஆகியோர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.