ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் ! இணையும் ஆலியா பட் | Alia Bhatt

471

பாகுபலி, உலக சினிமா வரலாற்றில் தனி முத்திரை பதித்த ஒரு திரைப்படம் இந்த படத்தின் இயக்குநர் ராஜமவுலி தற்போது தனது அடுத்த படமான ஆர்ஆர்ஆர்-ல் தனது முழு கவனத்தை செலுத்திவருகின்றார். இந்தப் படத்திற்காக ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் கைகோர்த்துள்ளனர். சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் இருந்த 2 வீரர்கள் பற்றிய கதை இது. ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்தப்படத்தை 2020-ம் ஆண்டு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.

rajmouli

இந்நிலையில் படத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதை தற்போது உறுதிபடுத்தியுள்ளார் ஆலியா பட். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘நான் கரன் ஜோஹர் மூலம் சினிமாவில் அறிமுகமானதிலிருந்தே சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் ராஜமவுலி ஆகியோர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போது அந்த கனவு நிறைவேறியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of