எல்லையில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு பதிலாக நவீன தொழில்நுட்பங்கள் – ராஜ்நாத் சிங்

590

எல்லையில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு பதிலாக நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், எல்லையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபடுவதை தடுக்க தொழில்நுட்பத்தின் மூலமாக பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஒருங்கிணைக்கப்பட்ட எல்லை பாதுகாப்பு முறையை உருவாக்க மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக கூறிய ராஜ்நாத் சிங், அந்த முறை தற்போது சோதனை அடிப்படையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

எல்லையில் அமைக்கப்படும் தொழில்நுட்ப கருவிகளின் மூலமாக அங்குள்ள சூழல் என்ன என்பதை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்றும் எல்லையில் நடமாட்டம் தென்பட்டால் அங்கிருக்கும் கருவிகளின் மூலமாக கட்டுப்பாட்டு மையத்துக்கு எச்சரிக்கை அனுப்பப்படும் எனவும் அவர் கூறினார்.

Advertisement