கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு உதவி செய்ய மத்திய அரசு தயார் – ராஜ்நாத் சிங்

571

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.

தமிழக கடலோர மாவட்டங்களை கஜா புயல் புரட்டி போட்டது. மரங்கள், மின்கம்பங்கள், வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்ப மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கஜா புயல் பாதிப்பு குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமியிடம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைப்பேசி வாயிலாக கேட்டறிந்தார்.

அப்போது புயாலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், போர்கால அடிப்படையில் நடைபெற்று வரும் நிவாரண பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி எடுத்துரைத்தார்.

புயல் சேத விபரங்கள் அடங்கிய அறிக்கை விரைவில் மத்திய அரசு அனுப்பி வைக்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் மீட்பு பணிகள், நிவாரண பணிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக முதல்வரிடம் ராஜ்நாத் சிங் உறுதியளித்ததாக தெரிகிறது.

புயல் பாதிப்புகளை கண்காணிக்கவும், நிவாரண உதவிகளை செய்யவும் உள்துறை செயலாளருக்கு உத்தரவிடுள்ள ராஜ்நாத் சிங், தேவைப்பட்டால் அனைத்துதுறை அடங்கிய சிறப்பு குழு அனுப்ப தயாராக இருப்பதாகவும்  உறுதியளித்துள்ளார்.

 

Advertisement