கார்கில் வெற்றி தினம் – தேசிய போர் நினைவு சின்னத்தில் ‘கார்கில் வெற்றி ஜோதி’யை ஏற்றினார் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்

689

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் ‘கார்கில் வெற்றி ஜோதி’யை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏற்றி வைத்தார்.

காஷ்மீர் எல்லைப்பகுதியான கார்கிலில் கடந்த1999-ம் ஆண்டு ஊடுருவிய பாகிஸ்தான் படைகளை விரட்டியடிக்க இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த போர் முடிவுக்கு வந்த ஜூலை 26-ம் தேதியை ‘கார்கில் வெற்றி தினமாக’ ஆண்டுதோறும் இந்தியா கொண்டாடி வருகிறது.

அந்த வகையில் 20-வது கார்கில் வெற்றி தினம் வரும் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் ‘கார்கில் வெற்றி ஜோதி’யை மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஏற்றி வைத்தார்.

காஷ்மீர் உள்பட 11 முக்கிய நகரங்களின் வழியாக கொண்டு செல்லப்படும் கார்கில் ஜோதி வரும் 26-ம் தேதி டெல்லியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் மீண்டும் கொண்டு வரப்பட்டுகிறது.

Advertisement