டிரம்பிற்கு ஜனாதிபதி வழங்கிய பிரமாண்ட உணவு பட்டியல்…

243

டிரம்பின் 2 நாள் இந்தியா பயணத்தின் இறுதியாக குடியரசுத் தலைவர் மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் டிரம்புடன், மனைவி மெலனியா, மகள் இவாங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Dinnerசைவ மற்றும் அசைவத்தை உள்ளடக்கிய விருந்தில், சால்மன் மீன் டிக்கா, ஆலு டிக்கி, கீரை சாட் மற்றும் பலவகையான சூப்களுடன் விருந்து தொடங்கியது. டிரம்ப் இறைச்சி பிரியர் என்பதால் மட்டன் பிரியாணி, மட்டன் ரான் டிஷ், பட்டாணியால் சமைத்த காளான், புதினா ரைட்டா, குங்குமப்பூ கிரேவி உள்ளிட்டவை பரிமாறப்பட்டன.