மகாத்மா காந்தியின் கனவை அடுத்த 10 ஆண்டில் நனவாக்குவோம் – ராம்நாத் கோவிந்த்

210

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் இன்று தொடங்கியது.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி, நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமது உரையை தொடங்கினார். அப்போது, புதிய இந்தியாவை உருவாக்குவதில் மத்திய அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது என்றும், காந்தி மற்றும் நேருவின் கனவுகளை நனவாக்கப்போவது அடுத்த 10 ஆண்டுகள் தான் எனவும் கூறினார். நேரு, வல்லபாய் பட்டேலின் கனவு நனவாகி வருகிறது என்றும், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி மிகவும் முக்கியமானது எனவும் குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் குறிப்பிட்டார்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி பணியாற்ற நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்  என்று கூறிய குடியரசுத் தலைவர், இந்தியாவின் வளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் மேம்பட்டுள்ளது  என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் கொள்கைகளும் திட்டங்களும் அனைத்து இந்தியர்களுக்கும் பயனளிக்கின்றன  என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த கூறியுள்ளார்.

அயோத்தி தீர்ப்பை மக்கள் முழு மனதுடன் வரவேற்றனர்  என்றும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்கு சம உரிமை  வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒரு சாதனை என்று சொல்லத்தக்க அளவில் சிறப்பாக இருந்தது என்றும், மத்திய அரசு ஏழைகளுக்கும், பெண்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

இலவச எரிவாயு, மின்சாரம், வீடு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், சிறுவியாபாரிகள் பென்ஷன் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது எனவும் குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவித் குறிப்பிட்டார்.

3.60 கோடி ரூபாயில் குடிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், சிக்கிம், மணிப்பூர், மிசோரமிற்கு ரயில் பாதைகள் அமைக்கப்படும் எனவும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த தமது உரையில் தெரிவித்தார். போராட்டங்களின் போது வன்முறையில் ஈடுபடுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றும், குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமது உரையில் கேட்டுக்கொண்டார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of