குடியரசுத் தலைவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து

347

வன்முறையால் காயமடைந்த உலகத்தை ஏசுவின் போதனைகள் குணப்படுத்தும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கிருஸ்துமஸ் வாழ்த்து செய்தியில், இந்தியா மற்றும் உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை உரித்தாக்கி கொள்வதாக தெரிவித்துள்ளார்.

வன்முறை மற்றும் குரோதத்தால் காயமடைந்த உலகத்தை ஏசுவின் போதனைகள் குணப்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார். அன்பு, இரக்கம் மற்றும் சகோதரத்துவத்தை பின்பற்ற, மனிதகுலத்திற்கு உத்வேகமாக இருந்த ஏசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.