“மிரட்டல் விடும் வழக்கமான வேலையை தான் திமுக பார்த்திருக்கிறது” – ராமதாஸின் அடுத்த அதிரடி..!

747

ஆணையத்துக்கே மிரட்டல் விடும் வழக்கமான வேலையைத் தான் திமுக செய்திருக்கிறது என்று பஞ்சமி நில விவகாரத்தில் திமுகவை பாமக நிறுவனர் கடுமையாகச் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் செவ்வாயன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

முரசொலி நிலத்தின் மூலப் பத்திரத்தை அதன் நிர்வாகம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இன்றும் தாக்கல் செய்யவில்லை. மாறாக ஆணையத்துக்கே மிரட்டல் விடும் வழக்கமான வேலையைத் தான் திமுக செய்திருக்கிறது.

மிரட்டல் விடுப்பதை விடுத்து மூலப்பத்திரத்தை காட்டுங்கள். அது தான் அறம். அது தான் நேர்மை!
முரசொலி விவகாரத்தில் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க முடியாத திமுக, அச்சிக்கலை எழுப்பிய மருத்துவரின் 1000 ஏக்கர் குறித்து தெரிவிக்கப் போவதாக கூறியுள்ளது. சவாலை ஏற்கிறேன்.

எனது 1000 ஏக்கர் குறித்த விவரத்தை கூறட்டும். அப்படி ஒரு நிலம் இருந்தால் அதை அவர்களுக்கே கொடுத்து விடுகிறேன்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.