4 நாட்கள் கஷ்டப்பட்டால் 40 தொகுதிகளிலும் வெற்றி நமதே.., ராமதாஸ் கடிதம்

505

நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் வாக்காளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக தேர்தல் அறிக்கைகளை அள்ளி வழங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி, தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தேர்தலை சந்திக்க உள்ள பாமக-வின் நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களுக்காக எழுதிய கடிதத்தில் கூறியிருப்பவை,

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி, 18 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவும் வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை போலவே சட்டசபை தேர்தலும் மிகவும் முக்கியமானதாகும். இந்த இரு தேர்தல்களுக்குமான பிரசாரம் நிறைவடைய இன்னும் 4 நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. அடுத்து வரும் 4 நாட்களுக்கான பணிகள் நமக்கு முக்கியமானவை.

தேர்தல் களமும், களச்சூழலும் நமக்கு ஆதரவாக உள்ளன. மக்களும் நமக்கு வாக்களிக்க விருப்பமாக உள்ளனர். அதை உணர்ந்து அடுத்த 4 நாட்களுக்கு கடுமையாகவும், கவனமாகவும் உழைத்தால் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டசபை தொகுதிகளிலும் நமக்கே வெற்றி. இது உறுதி.