குரூப் 2 தேர்வு..! தமிழ் நீக்கம்..! தேர்வாணையத்தை பாராட்டி தள்ளிய ராமதாஸ்..! ஏன் தெரியுமா..?

1107

தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் சார்பில் அரசு வேலைகளுக்கான தேர்வுகள் குரூப் -1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 என்ற நிலைகளில் நடத்தப்படுகின்றன. இதில் குரூப் -2 தேர்வு முறையில் தற்போது புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி. குரூப் -2 முதநிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பிரதானத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு, முதல்நிலைத் தேர்வில் மொழித்தாளுக்கு பதிலாக பொது அறிவு வினாக்கள் அதிக்கரிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்து ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் போட்டுள்ளார்.

அந்த டுவீட்டில், தொகுதி-2 முதனிலை தேர்வில் பொதுத்தமிழ் தாள் நீக்கப்பட்டாலும் அதில் கேட்கப்படும் வினாக்கள் முதனிலை மற்றும் முதன்மைத் தேர்வில் சேர்க்கப்பட்டுள்ளன என்றும், இந்த தேர்வில் தமிழ் இலக்கியங்கள் சார்ந்த கேள்விகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழ் தெரியாதவர்கள் மற்றும் தமிழ் மொழி படிக்காதவர்கள் இத்தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.