திருமாவை தலைவராக்கியது என்னுடைய தவறு! ராமதாஸ் காட்டம்!

1242

அதிமுக-வை பற்றி கடுமையாக விமர்சித்த பாமக-வின் நிறுவனத்தலைவர் ராமதாஸ், தற்போது அக்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார். இதற்கு பலத்தரப்பட்டவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அதையெல்லாம் கண்டுக்கொள்ளாத ராமதாஸ், தற்போது தமிழகம் முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசியதாவது.

“தைலாபுரம் தோட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையை வைத்து அதை திருமா வளவனைத் திறக்க வைத்தேன்.

சமுதாயத்திற்கு பயன்படுவார் என்றெண்ணி, மதுரையில் இருந்த அவரை இங்கே கொண்டு வந்து அறிமுகம் செய்தேன்.

அவரை ஊடகங்கள் இன்று ஒரு தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளன என்றால் அதற்குக் காரணம் நான்தான். அது என்னுடைய தவறுதான்”

எனக் கூறியுள்ளார்.

Advertisement